Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்தர்கள் வழிபட்ட கோவில்.! 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம்.!!

temple

Senthil Velan

, திங்கள், 29 ஜனவரி 2024 (09:55 IST)
சித்தர்கள் வழிபட்ட வரலாறு கொண்ட 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமிக்கு 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது.
 
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம்   இரண்டு சித்தர்கள் வழிபாடு செய்த சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாறு கொண்ட கோவிலாகும்..
 
இத்திருக்கோவில் 5 நிறம் மாறும் தன்மை கொண்டதாகவும் சிவராத்திரி அன்று முழு பக்தியுடன் வழிபட்டால் ஶ்ரீபஞ்சவர்ண ஸ்வாமி 5 நிறங்களும் மாறுவதை பக்தர்கள் கண்கூட கண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது
 
webdunia
திருமண பாக்கியம் நோய் தீர்க்கும் வல்லமை படைத்த ஶ்ரீ பஞ்சவர்ண சுவாமி, விச கடிகளுக்கு விபூதி மூலம் வியாதியை சரி செய்யும் சுவாமியாக திகழ்ந்து வரும்  திருக்கோயிலாகும்.
 
இந்நிலையில் ஶ்ரீ பஞ்சவர்ண சுவாமிக்கு 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் ஸ்ரீ பஞ்சவர்ணர் பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமிக்கு விபூதி அபிஷேகமும், பன்னீர் அபிஷேகமும் நடைபெற்றது.

 
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர், ஈக்காடு, புள்ளரம்பாக்கம், ஒதிக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமியை வழிபட்டு, ஓம் சிவாய நாமம் எழுதி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரத்தின் முதல் நாளே எகிறிய பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!