Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூதாட்டியை ரோட்டில் பலாத்காரம் செய்த 18 வயது இளைஞர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

Advertiesment
கோப்புப்படம்

Siva

, திங்கள், 29 ஜனவரி 2024 (07:19 IST)
82 வயது மூதாட்டியை 18 வயது இளைஞர் ஒருவர் ரோட்டில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை எண்ணூர் பகுதியில் 82 வயது பொன்னி என்ற மூதாட்டி ஆதரவற்ற நிலையில் இருந்த நிலையில் அவருக்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் உணவு கொடுத்து உதவி செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி சாலை ஓரத்தில் மூதாட்டி உயிர் இழந்ததை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின் இறந்ததாக தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது 18 வயது வாலிபர் ஒருவர் அந்த மூதாட்டியை பலவந்தமாக ரோட்டிலேயே பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 88 வயது மூதாட்டியை  18 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் அணி மாற மாட்டேன்: முதல்வர் பதவியேற்றதும் நிதிஷ்குமார் கொடுத்த உறுதி..!