Publish Date: Mon, 29 Jan 2024 (09:53 IST)
Updated Date: Mon, 29 Jan 2024 (09:56 IST)
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை 600 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே நல்ல ஏற்றத்தில் உள்ளது
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தை 600 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 300 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 185 புள்ளிகள் உயர்ந்து 21,540 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து இனிவரும் நாட்களிலும் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், பேங்க் பீஸ், கோல்ட் பீஸ், ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் சிப்லா, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.