Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பேருந்துகளில் யூபிஐ மூலம் டிக்கெட் எடுக்கலாம்! – இன்று முதல் சோதனை முயற்சி அமல்!

TNSTC

Prasanth Karthick

, திங்கள், 29 ஜனவரி 2024 (09:05 IST)
சென்னை மாநகர பேருந்துகளில் யூபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதியை கொண்டு வருவதற்கான சோதனை முயற்சி இன்று அமலுக்கு வருகிறது.



தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதிலுனே ஆப்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. தற்போது ரயில் நிலையங்கள், மெட்ரோ உள்ளிட்டவற்றிலும் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று சோதனை முயற்சி அமலுக்கு வந்துள்ளது.


அதன்படி, முதற்கட்டமாக பல்லாவரம் பேருந்து பணிமணையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது கூகிள் பே, ஃபோன் பெ போன்ற யுபிஐ ஆப்கள் மூலமாகவோ அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தியோ டிக்கெட்டுகளை பெற முடியும்.

இதன் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து இந்த வசதி சென்னை மாநகர் முழுவதும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீகாரில் இன்று நுழைகிறது ராகுல் காந்தியின் யாத்திரை.. நிதிஷ்குமார் குறித்து விமர்சிப்பாரா?