Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்.எட். படிப்புக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க காலநீட்டிப்பு: கடைசி தேதி என்ன?

Advertiesment
எம்.எட்

Siva

, வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (08:08 IST)
2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2025 அன்று முதல் தொடங்கி இன்றுடன் (20.08.2025) முடிவடைகிறது. இந்த கால அவகாசம் 15.09.2025 வரை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-
 
தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 11.08.2025 முதல் தொடங்கப்பட்டது. மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி விண்ணப்பப் பதிவு இன்றுடன் முடிவடைகிறது, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசையின் படி 26.08.2025 முதல் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடங்கும். இதன் விவரம் SMS மற்றும் e-mall மூலம் மாணாக்கர்களுக்கு அனுப்பப்படும். முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 அன்று முதல் தொடங்கும்.
 
எம்.எட். சேர்க்கைகான விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க 21.08.2025 முதல் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக தொடர்ந்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 15.09.2025 வரை மாணாக்கர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
 
இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று மதுரையில் தவெக மாநாடு.. கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா விஜய்?