தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) காலமானார். அவருக்கு வயது 80. வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஆர். பாலுவின் மனைவி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்சித்தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் நேரில் சென்று டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த ரேணுகாதேவியின் மகன், தமிழகத் தொழில்துறை அமைச்சரும், தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான டி.ஆர்.பி. ராஜா ஆவார். தனது தாயின் மறைவால் துயரத்தில் இருக்கும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆறுதல்கள் குவிந்து வருகின்றன. இன்று மாலை அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.