Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு மயங்கி விழுந்த குழந்தை! – வீடியோவை ஷேர் செய்து இயக்குனர் மோகன்.ஜி முதல்வருக்கு கோரிக்கை!

Smoke Biscuit

Prasanth Karthick

, ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (12:43 IST)
சமீபமாக ஸ்மோக் பிஸ்கட் கலாச்சாரம் வளர்ந்து வரும் நிலையில் அதுகுறித்து இயக்குனர் மோகன்.ஜி பகிர்ந்துள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நாடு முழுவதும் பலவகை உணவுகள் ட்ரெண்டிங் ஆகும் நிலையில் சில வகை உணவுகள் உயிருக்கு ஆபத்தாகவும் அமைந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. சமீபத்தில் நாடு முழுவதும் பல பகுதிகளில் சவர்மா சாப்பிட்டு குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து சவர்மா கடைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதுபோல பஞ்சு மிட்டாயில் ரோஸ் நிறத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ரசாயனம் சேர்ப்பது தடை செய்யப்பட்டது. அந்த வகையில் சிறுவர்களிடையே பிரபலமாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட்டும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

திரவ நைட்ரஜனில் முக்கி எடுத்து வாயில் போடப்படும் பிஸ்கட்டுகளில் இருந்து எழும் புகையை கண்டு சிறுவர்கள் பலரும் அந்த பிஸ்கட்டுகளை சுவைக்க விரும்புகின்றனர். சமீபமாக திருவிழாக்கடைகள், கண்காட்சிகளிலும் இந்த ஸ்மோக் பிஸ்கட் ஸ்டால்களை காண முடிகிறது.


இந்நிலையில் தற்போது தமிழில் திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டு மயக்கமடையும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதை பகிர்ந்துள்ள அவர் “இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூர்தர்ஷன் லோகாவில் காவி வண்ணம்..! – மு க ஸ்டாலின் கண்டனம்!