Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூர்தர்ஷன் லோகாவில் காவி வண்ணம்..! – மு க ஸ்டாலின் கண்டனம்!

Advertiesment
Dhoordharshan

Prasanth Karthick

, ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (12:21 IST)
தூர்தர்ஷன் சேனலின் லோகோ சமீபத்தில் காவி வண்ணமாக மாற்றப்பட்டதற்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.



மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தூர்தர்ஷனில் பிராந்திய மொழிகளில் பல்வேறு சேனல்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழில் தூர்தர்ஷன் பொதிகை என்ற பெயரில் சேனல் செயல்பட்டு வந்தது. சமீபத்தில் அதன் பெயர் டிடி தமிழ் என மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது அதன் வண்ணம் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது #Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்! தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூண்டோடு காலியாகிறதா கமல் கட்சி.. 3 பிரபலங்கள் விலக இருப்பதாக தகவல்..!