Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட விருதுகளை அறிவித்த தமிழக அரசு- அதிக விருதுகளை அள்ளிய இறுதிச்சுற்று & தனி ஒருவன்

2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட விருதுகளை அறிவித்த தமிழக அரசு- அதிக விருதுகளை அள்ளிய இறுதிச்சுற்று & தனி ஒருவன்

vinoth

, செவ்வாய், 5 மார்ச் 2024 (07:48 IST)
தமிழக அரசு சார்பாக ஆண்டுதோறும் தமிழ் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகள் கடந்த சில ஆண்டுகளாக தாமதமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருது பட்டியலில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் மற்றும் மாதவன் நடித்த இறுதிச் சுற்று ஆகிய படங்கள் அதிக விருதுகளைப் பெற்று முன்னணியில் உள்ளன.

தமிழ் திரைப்படங்களுக்கான விருது பட்டியல்
 
  • சிறந்த படம் முதல் பரிசு: தனி ஒருவன்
  • சிறந்த படம் இரண்டாம் பரிசு: பசங்க 2
  • சிறந்த படம் மூன்றாம் பரிசு: பிரபா
  • சிறந்த படம் சிறப்புப் பரிசு: இறுதிச்சுற்ற
  • பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு): 36 வயதினிலே
  • சிறந்த நடிகர்: ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று)
  • சிறந்த நடிகை: ஜோதிகா (36 வயதினிலே)
  • சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு: கௌதம் கார்த்திக் (வை ராஜா வை)
  • சிறந்த நடிகை சிறப்புப் பரிசு: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
  • சிறந்த வில்லன் நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
  • சிறந்த நகைச்சுவை நடிகர்: சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு)
  • சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம்/ 36 வயதினிலே)
  • சிறந்த குணச்சித்திர நடிகர்: தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)
  • சிறந்த குணச்சித்திர நடிகை: கவுதமி (பாபநாசம்)
  • சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
  • சிறந்த கதையாசிரியர்: மோகன் ராஜா (தனி ஒருவன்)
  • சிறந்த உரையாடலாசிரியர்: இரா.சரவணன் (கத்துக்குட்டி)
  • சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்)
  • சிறந்தப் பாடலாசிரியர்: விவேக் (36 வயதினிலே),
  • சிறந்த பின்னணிப் பாடகர்: கானா பாலா (வை ராஜா வை)
  • சிறந்த பின்னணிப் பாடகி: கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே)
  • சிறந்த ஒளிப்பதிவாளர்: ராம்ஜி (தனி ஒருவன்)
  • சிறந்த ஒலிப்பதிவாளர்: 1) ஏ.எல்.துக்காராம் 2) ஜெ.மஹேச்வரன் (தாக்க தாக்க)
  • சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்): கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)
  • சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்): பிரபாகரன் (பசங்க 2)
  • சிறந்த சண்டைப் பயிற்சியாளர்: ரமேஷ் (உத்தம வில்லன்)
  • சிறந்த நடன ஆசிரியர்: பிருந்தா (தனி ஒருவன்)
  • சிறந்த ஒப்பனைக் கலைஞர்: சபரி கிரீஷன் (36 வயதினிலே/ இறுதிச்சுற்று)
  • சிறந்த தையற் கலைஞர்: வாசுகி பாஸ்கர் (மாயா)
  • சிறந்த குழந்தை நட்சத்திரம்: 1). மாஸ்டர் நிஷேஸ் 2). பேபி வைஷ்ணவி (பசங்க 2)
  • சிறந்த பின்னணிக்குரல்: (ஆண்) கௌதம் குமார் (36 வயதினிலே)
  • சிறந்த பின்னணிக்குரல்: (பெண்) ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)
 
எம் ஜி ஆர் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கான விருது பட்டியல்
  • சிறந்த இயக்குநர்: கே.மோகன் குமார் (புர்ரா)
  • சிறந்த ஒளிப்பதிவாளர்: விக்னேஷ் ராஜகோபாலன் (கண்ணா மூச்சாலே)
  • சிறந்த ஒலிப்பதிவாளர்: வி.சதிஷ் (கண்ணா மூச்சாலே)
  • சிறந்த படத்தொகுப்பாளர்: ஏ.முரளி (பறை)
  • சிறந்த படம் பதனிடுவர்: வி.சந்தோஷ்குமார் (கிளிக்)

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கியக் காட்சிகளை படமாக்க சிங்கப்பூர் செல்லும் விக்னேஷ் சிவனின் எல் ஐ சி படக்குழு