Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திராவிட கொள்கையை உறுதி செய்த தமிழிசைக்கு நன்றி! - வாழ்த்து பதிவை வைத்து வளைத்த மு.க.ஸ்டாலின்!

Advertiesment
Tamilisai

Prasanth Karthick

, செவ்வாய், 4 மார்ச் 2025 (10:39 IST)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்த தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வைரலாகியுள்ளது.

 

நேற்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது முன்னாள் தமிழக பாஜக தலைவரும், முன்னாள் தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

 

அதை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “என் பிறந்தநாளில் பாஜக நிர்வாகியான அன்பு சகோதரி டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் எனக்கு மும்மொழியில் வாழ்த்து தெரிவித்து தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய பண்பையும் காட்டியிருக்கிறார்.

 

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் இந்தி இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு. தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளுக்கு பிறகு தெலுங்கு மொழியில் வாழ்த்தியுள்ளார். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால் பழக்கத்தின் மூலமாக அந்த மொழியை அறித்து கொண்டிருக்கிறார்.

 

இதிலிருந்தே மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்துக் கொள்ள பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழியிலான தமிழ்நாட்டின் உணர்வையும் எனக்கான பிறந்தநாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள சகோதரி தமிழிசைக்கு என் நன்றி” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

400 ஆண்டு பழமையான கொடைக்கானல் அருகே உள்ள கிராமம்.. மருத்துவ உதவி செய்த நிறுவனம்..!