Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

Advertiesment
premalatha vijaynakanth

Siva

, ஞாயிறு, 2 மார்ச் 2025 (15:54 IST)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர், "தேமுதிக பொருத்தவரை தாய் மொழியை மட்டுமின்றி, அனைத்து மொழிகளையும் காக்க வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான எங்களுக்கும்  முன்பே அழைப்பு வந்துவிட்டது. எனவே, உறுதியாக அந்த கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்," என்று கூறினார்.
 
ஏற்கனவே அதிமுகவும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என்று அறிவித்த நிலையில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில், எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், பாமகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் என முன்பே அறிவித்துள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயில் மார்க் சம்பா ரவை குறித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி! - நீதிமன்றம் உத்தரவு!