Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவன் கூப்பிட்டா போகணுமான்னு நினைக்காதீங்க! எதிர்கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின்!

Advertiesment
Stalin

Prasanth Karthick

, திங்கள், 3 மார்ச் 2025 (11:33 IST)

தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக சில கட்சிகள் கூறிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

 

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தமிழ்நாட்டில் தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக கருதும் திராவிட முன்னேற்றக் கழகம், மாநிலத்தின் அனைத்து கட்சிகளையும் இதுகுறித்து விவாதிப்பதற்கான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

 

ஆனால் பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில் நாகப்பட்டிணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வர முடியாது என்று சொன்னவர்கள் தயவுகூர்ந்து வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இதை அரசியலாக பார்க்காதீர்கள். இது நம்முடைய உரிமை. இவன் என்ன அழைப்பது, நாம் என்ன போவது என்று கௌரவம் பார்க்காதீர்கள்” என கோரிக்கை வைத்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அமைச்சர் மகளுக்கு பாலியல் சீண்டல்.. ஏழு பேர் மீது வழக்குப்பதிவு..!