Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

400 ஆண்டு பழமையான கொடைக்கானல் அருகே உள்ள கிராமம்.. மருத்துவ உதவி செய்த நிறுவனம்..!

Advertiesment
400 ஆண்டு பழமையான கொடைக்கானல் அருகே உள்ள கிராமம்.. மருத்துவ உதவி செய்த நிறுவனம்..!

Siva

, செவ்வாய், 4 மார்ச் 2025 (10:21 IST)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் இருக்கும் ஒரு சிறு கிராமம் தான் வெள்ளகவி. 400  ஆண்டுகள் பழமையான இந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் பெறுவதில் இன்றும் எட்டாக்கனியாக உள்ளது.
 
அந்த கிராமத்து மக்கள் அவசர சேவை பெற சாலை வசதி இல்லாத பாதை வழியாக இரண்டு மணி நேரம் நடந்தும் வாகனத்தில் சென்றும் 11 கிலோ மீட்டர் தூரமுள்ள கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சென்றடைய வேண்டிய நிலை உள்ளது.
 
இதனால் ஏற்படும் ரத்தப்போக்கு மற்றும் உயிர் இழப்புகளை தடுக்க வளர்ந்துவ ரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான bizzmed.com இந்த பகுதி மக்களுக்கு இலவச முதலுதவி பொருட்களை தொடர்ந்து வழங்க முன் வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் இந்த உதவியை தொடங்கி வைத்தனர்.
 
இன்னும் அந்த கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தங்கள் நிறுவனம் தயாராக இருக்கிறது என்று இந்நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் bizzmed.com என்னும் இந்த நிறுவனம் ஒரு B2B மருத்துவ உபகரணங்கள் மற்றும்  மருந்து பொருட்களுக்கான இணையவழி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் சேவையை இந்தியா முழுவதும் எங்கிருந்தாலும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளகவி போன்று இன்னும் சில கிராமங்களுக்கும் தங்கள் நிறுவனம் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், அடிப்படை வசதியில்லாத கிராமங்களில் உள்ளவர்கள் தங்களை https://www.bizzmed.com என்ற இணையதளத்தில் உள்ள தொடர்பு எண்கள் மூலம் தொடர்பு கொண்டால் மருத்துவ உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் bizzmed நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவு முழுவதும் மது விருந்து? காலையில் 19 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு..!