Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவையில் டபுள் மடங்கு உயர்ந்த டீ, காபி விலை! - பொதுமக்கள் அதிர்ச்சி!

Advertiesment
Tea price increase

Prasanth K

, வியாழன், 4 செப்டம்பர் 2025 (14:39 IST)

சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

தமிழ்நாடு முழுவதும் அதிகமான மக்கள் குடிக்கும் பானமாக டீ, காபி இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி ஏற்றத்தை பொறுத்து நகரங்கள், கிராமங்களில் அவரவர் வசதிக்கேற்ப டீ, காபி விலை மாற்றப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் டீ 10 ரூபாய் முதல் 12 ரூபாய்க்கும், காபி 15 ரூபாயிலிருந்து 18 ரூபாய்க்குள்ளும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் டீ ரூபாய் 15 ஆகவும், காபி ரூபாய் 20 ஆகவும் விலை உயர்த்தப்பட்டது.

 

அதை தொடர்ந்து கோவையில் டீ, காபி விலை உயர்ந்துள்ளது. அதன்படி இனி டீ ரூபாய் 20க்கும், காபி ரூபாய் 26க்கும் விற்பனை செய்யப்படும் என கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில் அதிகரித்த மூலப்பொருட்கள் விலை, ஊழியர் சம்பளம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்! மத்திய அரசு