1998 ஜனவரி மாதம், டாஸ்மாக் ஊழியராக பணிபுரிந்து வந்த பிரேம்குமார், ரூ.150 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2008-ல் அவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, பிரேம்குமார் உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். ஆனால், இரண்டு நீதிமன்றங்களும் அவரது மனுக்களை தள்ளுபடி செய்தன.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு பிரேம்குமார் தலைமறைவானார். ஆறு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அவரை, தற்போது காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..