Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்.. ஒரு தொழிற்சங்கம் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை..!

Advertiesment
டாஸ்மாக்

Mahendran

, புதன், 17 செப்டம்பர் 2025 (16:21 IST)
தமிழகத்தில், காலி மது பாட்டில்களை மீண்டும் பெறும் திட்டம், ஊழியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இத்திட்டத்திற்கு  ஒரு தொழிற்சங்கங்கள் கூட ஆதரவு அளிக்கவில்லை என்பதால், திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.
 
வனங்கள், மலைகள் மற்றும் சாலைகளில் வீசப்படும் காலி மது பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் கால்நடைகளுக்கான அச்சுறுத்தல்களை தவிர்க்க, காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
 
தற்போது 15 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இத்திட்டம், விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கு, டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இதுகுறித்துத் தொழிற்சங்கத்தினர் கூறுகையில், "மாலை நேரங்களில் மதுபான கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்போது காலி பாட்டில்களை சேகரிப்பது கடினம். மேலும், கடைகளில் போதிய இடவசதி இல்லை. எனவே, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக டாஸ்மாக் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டோம்" என்று கூறினர். 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்வாரிய அதிகாரியிடம் ரூ.150 கோடி சொத்து: அவ்வளவும் லஞ்சப்பணமா?