தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை: விஜய்யின் புதிய வியூகம்!

Siva
வியாழன், 18 செப்டம்பர் 2025 (07:37 IST)
'தமிழக வெற்றி கழகம்'  கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் இலக்கை அறிவித்துள்ளார். இந்த இலக்கை எட்டும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்துமாறு விஜய் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் ஆட்சிக் குறைகளை மக்களிடம் எடுத்துரைக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 
 
கிராமங்களில் உள்ள மக்களின் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
 
மேலும் டிசம்பருக்கு பின் விஜய்யின் அடுத்த இலக்கு கிராமங்களுக்கு செல்வதும் என்றும் தமிழகத்தில் உள்ள 1000 கிராமங்களுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments