அரசுப் போக்குவரத்து கழகங்களில், டீசல் செலவுகளை குறைக்கும் நோக்கில், 1,000 பேருந்துகளை 'சி.என்.ஜி.' எனப்படும் கேஸ் தொழில்நுட்பத்திற்கு தொழில்நுட்பத்துக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, மாநிலத்தின் 7 போக்குவரத்து கழகங்களில் சோதனை முறையில் சி.என்.ஜி. பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த ஆண்டில் விரைவு சேவைகளிலும் இந்த கேஸ் தொழில்நுட்பம் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.
தற்போது, 23க்கும் அதிகமான பேருந்துகள் சி.என்.ஜி. மூலம் இயக்கப்படுகின்றன. இந்த மாற்றத்தால், ஒரு கிலோமீட்டருக்கு சுமார் 3 முதல் 4 ரூபாய் வரை செலவு குறைவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கையில், பி.எஸ்.4 வகை டீசல் பேருந்துகளை புதிய தொழில்நுட்பத்துக்கு மாற்றுவதால், எரிபொருள் சேமிப்போடு பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகளும் கணிசமாக குறையும். ஒரு பேருந்திற்கு மாதத்திற்கு சுமார் 75,000 ரூபாய் வரை மிச்சப்படக்கூடியதாக கூறப்படுகிறது. மேலும், ஒருமுறை எரிவாயு நிரப்பினால், 600 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
தற்போது 1,000 பேருந்துகளை தேர்ந்தெடுத்து மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக டெண்டர்கள் அழைக்கப்பட்டு, நிறுவனம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், இன்னும் ஆறு மாதங்களில் இவை சேவையில் இணைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.