Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேண்டுதலுக்கு எண் 1ஐ அழுத்தவும்! மலேசியாவில் முதல் AI கடவுள்! - தரிசனத்திற்கு குவியும் மக்கள்!

Advertiesment
Mazu AI God

Prasanth Karthick

, செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (10:35 IST)

திரும்பும் இடமெல்லாம் ஏஐ மயமாகி வரும் நிலையில் அதில் கடவுளும் விதிவிலக்கல்ல என்ற வகையில் மலேசியாவில் ஏஐ கடவுளை மக்கள் வணங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய உச்சமாக மாறியுள்ளது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு. இணையம் ஏற்படுத்திய பாய்ச்சலை விட பல மடங்கு பல துறைகளிலும் ஏஐயின் செயல்பாடு அதிகரித்து வருகிறது. கல்வி, வணிகம் தொடங்கி பட்டித்தொட்டி வரை பரவியுள்ள ஏஐ தற்போது கடவுள்களையும் விட்டுவைக்கவில்லை.

 

மலேசியாவில் முதன்முறையாக பெண் கடவுளை ஏஐ மூலம் உருவாக்கியுள்ளனர். மலேசிய, சீன மக்களிடையே கடல் தெய்வமான மசு என்கிற பெண் தெய்வம் அதிகம் வணங்கப்படும் தெய்வமாக உள்ளது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள தியான்ஹோ கோவிலில் மசு தெய்வத்தை ஏஐ முறையில் உருவாக்கி கொண்டு வந்துள்ளார்கள்.

 

நீங்கள் மசுவிடம் சென்று உங்கள் குறைகளை சொன்னால் அந்த ஏஐ தெய்வம் வாய் திறந்து உங்களுக்கு ஆறுதல் சொல்கிறது. மசுவிடம் மனம் விட்டு பேசுவதற்கும், தரிசிப்பதற்கும் ஏராளமான பக்தர்கள் போட்டிப் போட்டு தியான்ஹோ கோவிலுக்கு செல்கிறார்களாம். இந்த வரவேற்பை பார்த்து வேறு சில கோவில்களிலும் இவ்வாறாக கடவுள்களை ஏஐ முறையில் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனராம்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி ரயிலில் 5 பெட்டிகளில் இருந்த பெண்களிடம் நகை கொள்ளை.. வடமாநில கொள்ளையர்களா?