தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை.
சமீபகாலமாக அவர் நடித்த குஷி மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர். தாய்மொழியான தமிழில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சமந்தா பாடகி சின்மயியின் கணவரான ராகுல் ரவீந்திரன் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். அதில் “எனது கடினமானக் காலகட்டத்தில் என் கூடவே இருந்தார் ராகுல். நானும் அவரும் 17 வருடங்களாக மிகச்சிறந்த நண்பர்கள். இது வெறும் நட்பு மட்டுமில்லை.அவர் என் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். அவர் என் இரத்தம்” எனக் கூறியுள்ளார். ராகுல் ரவீந்திரன் இயக்க இருந்த கேர்ள் ஃப்ரண்ட்படம் ஒன்றில் சமந்தா நடிக்க இருந்து, அவரது உடல்நிலைக் காரணமாக பின்னர் ராஷ்மிகா நடித்து வருகிறார்.