Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்ஜெட் தாக்கலின்போது அமளி: அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

Advertiesment
TN Assembly

Mahendran

, வெள்ளி, 14 மார்ச் 2025 (10:44 IST)
தமிழக பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏக்கள் அமளி செய்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழக அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பட்ஜெட் உரையை தொடங்குமுன்பே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழலை கண்டித்து அவையில் அமளியில் ஈடுபட்ட அவர்கள், சில நிமிடங்களில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
முன்னதாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, அதிமுக எம்எல்ஏக்களுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த பிறகு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். மேலும், பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

TN Budget 2025 Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கியமான அறிவிப்புகள்!