இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில், பட்ஜெட் ஆவணத்தில் உள்ள ரூபாயின் அதிகாரப்பூர்வ சின்னமாக தமிழக அரசு ₹ என்பதற்கு பதிலாக "ரூ" என்ற தமிழ் வார்த்தையாக மாற்றியுள்ளது.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளையொட்டி, முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தங்கம் தென்னரசு, இது குறித்து பேசும்போது,
"எந்த ஒரு தேசிய எண்ணத்தையும் அவமானப்படுத்துவதோ அல்லது குறைத்து மதிப்பீடுவதோ எங்கள் நோக்கம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "நாட்டின் ஒருமைப்பாட்டிலும், இறையாண்மையிலும், வளர்ச்சியிலும் பெரும் மதிப்பு கொண்டவர்கள் நாங்கள்" என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழின் பெருமையை உலகறிய செய்வதற்காகவே இந்த சின்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.