Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

47 மொழிகளில் திருக்குறள், கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

Advertiesment
47 மொழிகளில் திருக்குறள்,  கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

Mahendran

, வெள்ளி, 14 மார்ச் 2025 (10:01 IST)
2025 26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்.
 
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்
 
கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு
 
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி  திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு
 
100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்
 
ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
 
மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்
 
அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்
 
ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். மேலும் பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும்
 
47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு
 
பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும்
 
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்
 
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்
 
திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும்
 
அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்
 
ஒவ்வொரு ஆண்டும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி 
 
சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும்
 
இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும்
 
புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்
 
இப்போதைக்கு இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் என்னென்ன திட்டங்கள் என்பதை சில நிமிடங்களில் பார்ப்போம்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய சின்னத்தை அவமதிக்க வில்லை.. தமிழக நிதி அமைச்சர் விளக்கம்..!