சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
முன் அறிவிப்பு இல்லாமல் பேச அனுமதி கோரிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரபின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் முன் அறிவிப்பை கொடுக்காமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பேச அனுமதி அளிக்காததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளீயில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் அனைவரும் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என கடந்த ஆட்சியில் சபாநாயகர் தனபால் கூறியதையே எப்போதும் கடைபிடிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் வேலு தெரிவித்தார்
"நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன், தயாராக உள்ளேன். டிவியை பார்த்து கொண்டுதான் தெரிந்து கொண்டேன் என்று நான் கூற மாட்டேன், ஆனால் மரபை காப்பாற்றுங்கள்" என்று முதலமைச்சர் ஸ்டால்லின் கூறினார்.
இந்த நிலையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்து, அவர்களை வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பித்தார்.