தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்தபோது வழங்கிய வாக்குறுதியின்படி, பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், முதலில் பல லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டும், சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
எனினும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும், புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு சில மாதங்கள் முன்பிருந்து புதியவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இதுவரை மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்திருக்காதவர்கள் விண்ணப்பிப்பதற்காக மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு அடுத்த சில மாதங்களுக்குள் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சட்டமன்றத்தில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K