பரபரப்பான அரசியல் சூழலில் நாளை தமிழக சட்டமன்றம் கூடும் நிலையில் எதிர்கட்சிகள் பல்வேறு விவாதங்களை எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 24 முதல் ஏப்ரல் 29 வரை சட்டசபை கூட்டம் நடந்த நிலையில், 6 மாத கால இடைவெளியில் சட்டசபை கூட வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையில் நாளை மீண்டும் சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.
சட்டசபை கூடியதும், முதல் நாளில் மறைந்த வால்பாறை தொகுதி உறுப்பினர் அமுல் கந்தசாமி உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது, கரூர் துயரத்திற்கு இரங்கல் தெரிவிப்பது ஆகியவை முடிந்து அவை அலுவல்கள் அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜித்குமார் கஸ்டடி மரணம், கரூர் கூட்டநெரிசல் பலி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவையில் விவாதத்தை எழுப்பலாம் என்றும் கூறப்படுகிறது.
நாளை சட்டசபை கூட்டம் தொடங்க உள்ள நிலையில் இன்று காலை 11 மண்க்கு சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
Edit by Prasanth.K