Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீபாவளி கொண்டாட்டம்: தமிழகத்தில் 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி! கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

Advertiesment
crackers

Prasanth K

, திங்கள், 13 அக்டோபர் 2025 (07:46 IST)

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

 

தீபாவளிக்கு சரியாக ஒரு வாரக்காலமே உள்ள நிலையில் மக்கள் ஜவுளி வாங்குவது, பட்டாசு வாங்குவது என கொண்டாட்டட்டத்திற்கு வேகமாக தயாராகி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகள் அமைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி, நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகிய மூன்று இடங்களிலும் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

அதை தொடர்ந்து நிரந்தர பட்டாசு கடைகள் அமைக்க 2,751 விண்ணப்பங்களும், தற்காலிக கடைகள் அமைப்பதற்கு 6,702 விண்ணப்பங்களுமாக மொத்தம் 9,549 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றை பரிசீலித்து 6,630 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 404 கடைகளுக்கான விண்ணப்பங்கள் பாதுகாப்பு வசதிகள் போதாமை உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மீத விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.

 

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் பட்டாசு விற்பனையும் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2026 தேர்தலை நோக்கி அதிமுக - தவெக கூட்டணி? எடப்பாடி பழனிசாமியின் 'சுப ஆரம்பம்' Vs விஜய்யின் மறுப்பு!