Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

Advertiesment
அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

Mahendran

, வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (18:19 IST)
மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக முதல்வரின் அனைத்து கட்சி கூட்டத்தில், அதிமுக பங்கேற்கும் என்றும் அதிமுக சார்பில் இரண்டு பேர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான அதிமுக நிலைப்பாட்டை அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும், விஜய் கட்சி தான் எதிர்க்கட்சி என அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு பதிலளித்த அவர், "நாட்டில் ஆளுங்கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகள் தான். ஆனால், அதே நேரத்தில் சட்டமன்றத்தில் அதிமுக மட்டுமே பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இன்றைக்கும் நாங்களே எதிர்க்கட்சியாக உள்ளோம். 2026 ஆம் ஆண்டு ஆளுங்கட்சியாக இருப்போம்," என்று கூறினார்.
 
அடுத்த 62 வாரங்களுக்கு நாங்களே எதிர்க்கட்சி என்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரமுகர் ஆதவ் அர்ஜூனா  கூறியதற்கு, எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று கெட் அவுட் சொல்வார்கள்.. நாளை கட்-அவுட்டுக்கு போய்விடுவார்கள்: விஜய் குறித்து தமிழிசை