Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் புறக்கணிப்பு.. அண்ணாமலை கண்டனம்..!

Advertiesment
திமுக அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் புறக்கணிப்பு.. அண்ணாமலை கண்டனம்..!

Mahendran

, வியாழன், 27 பிப்ரவரி 2025 (15:20 IST)
திமுக அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் புறக்கணிக்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் திரு. MRK பன்னீர்செல்வம், திரு. பொன்முடி, திரு. நாசர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 
 
இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத  தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக,
தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 
 
தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதலமைச்சர்? 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னை வருகை ரத்து.. கடும் எதிர்ப்பால் எடுத்த முடிவா?