தமிழக அரசு, ஆகமம் கடைபிடிக்கும் கோயில்களும், ஆகம விதிகள் பின்பற்றப்படாத கோயில்களும் எவை என்பதை மூன்று மாதங்களில் தெளிவாக அடையாளம் காண உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சைவ ஆகம வழிப்பாட்டு கோயில்களில், சம்பந்தப்பட்ட ஆகம பிரிவை சேர்ந்தவர்கள் அல்லாதோரை அர்ச்சகராக நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அரசின் இந்த நடவடிக்கைகள், தங்களின் பாரம்பரிய பணி மற்றும் அடிப்படை உரிமையை பாதிக்கின்றன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேபோல், பல அமைப்புகளும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில், 2023 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மே 13 அன்று, அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்காக இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராமேஸ்வரம் கோயிலில் போதிய அர்ச்சகர்கள் இல்லாததால் பூஜைகள் பாதிக்கப்படுகின்றன என்றும், மாநிலத்தில் 2500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், ஆகம வழிப்பாடு உள்ள கோயில்கள் மற்றும் இல்லாத கோயில்கள் என்ற வகைப்படுத்தலை அரசு செய்ய வேண்டும்.
ஆகம விதிகள் இல்லாத கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கலாம்.
ராமேஸ்வரம் கோயிலில் அர்ச்சகர் நியமனம் அனுமதிக்கலாம்.
இந்த உத்தரவு, கோயில்களில் சமத்துவம் நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.