நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நடுவர் மன்ற சட்டம், 1996 -ன் கீழ், நடுவர் மன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் வழங்கும் உத்தரவுகளை, நீதிமன்றங்கள் தேவையான அளவிற்கு திருத்தவோ மாற்றவோ இயலும் என்ற முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வால், 4:1 என்ற பெரும்பான்மையுடன் வழங்கப்பட்டது.
தீர்ப்பின் அம்சப்படி, நடுவர் மன்றம் வழங்கிய எந்தவொரு உத்தரவும், சட்டம் 1996 இன் பிரிவு 34 மற்றும் 37ன் அடிப்படையில், வழக்கறிஞர்களின் மனுவின்பேரில் நீதிமன்றங்கள் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகின்றன .
நடுவர் மன்ற உத்தரவை திருத்தும் அதிகாரம் இருக்கிறது என்றாலும், அது மிகப்பெரும் பொறுப்புடன், அரசியல் சாசன சட்டவிதிகளுக்குள் கட்டுப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். மேலும், சட்டப்பிரிவு 142-ன் கீழ், உச்ச நீதிமன்றத்தின் விசேஷ அதிகாரத்தை பயன்படுத்தி அவ்வாறு திருத்தங்கள் செய்ய வழியுண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த தீர்ப்பின் முக்கிய நோக்கம், நடுவர் மன்ற உத்தரவுகளில் ஏற்படக்கூடிய ஒளிபடப்பிழை, கணக்குப் பிழை போன்றவற்றைத் திருத்தும் வகையில் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட முடியும் என்பதையே வலியுறுத்துகிறது.