Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

Advertiesment
netflix

Prasanth Karthick

, திங்கள், 28 ஏப்ரல் 2025 (16:09 IST)

ஓடிடி தளங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் ஓடிடி தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது மட்டுமல்லாமல், உள்நாட்டு, வெளிநாட்டு வெப் சிரிஸ்களும், பிற மொழி படங்களும் பல ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கின்றன.ஆனால் அவற்றில் பல தொடர்களில் ஆபாசமான காட்சிகள், வசனங்கள் இடம்பெறுவது பார்வையாளர்கள் முகம் சுளிக்கும்படி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

 

ஆனால் ஓடிடி தளங்களில் அவை ஆபாச காட்சிகள், கெட்ட வார்த்தைகள் கொண்டதாக இருக்கும்பட்சத்தில் அதை பார்க்கும் முன்பே அது குறித்த எச்சரிக்கை அறிவிப்பும் இடம்பெறுகிறது. எனினும் அந்த காட்சிகளை தணிக்கை செய்யவும், அதன் உள்ளடக்கங்களை கண்காணிக்கவும் நிபுணர் குழு தேவை என உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

 

இதன் அடிப்படையில் இதற்கு மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட ஓடிடி தளங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் அனைத்து ஓடிடி தளங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?