Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீரென கண் திறந்த அம்மன் சிலை.. திசையன்விளை கோவிலில் பரபரப்பு..!

Advertiesment
அம்மன் சிலை

Siva

, ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (11:08 IST)
திசையன்விளை பகுதியில் உள்ள கோவிலில் திடீரென அம்மன் சிலையை கண் திறந்ததாக கூறப்படுவது அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆஞ்சநேயர் கோவில் அருகே தெற்கு தெரு மாரியம்மன் சிலை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் இந்த சிலைக்கு பூஜைகள் நடந்து முடிந்து நடை சாத்தப்பட்டது. அதன்பின் பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக வந்தார். அப்போது அவர் அம்மனை பார்த்து வழிபட்டுக் கொண்டிருந்த பொது திடீரென  அம்மன் சிலையில் கண் திறந்திருப்பதாக அறிந்து பக்தி பரவசத்திலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.

உடனே அம்மன் சிலையை செல்போனிலும் புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

இரவில் கோவில் நடை அடைக்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போதும் அம்மனின் கண் திறந்து இருந்ததாகவும் அம்மனுக்கு பூசாரி பாலாபிஷேகம் செய்ததாகவும் அதன் பிறகு தான் கண் மூடியதாகவும் கோவிலில் வசித்து வரும் பக்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்.. காத்திருக்கும் பதவி என்ன?