பெருமாநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் நடைபெறும் குண்டம் திருவிழா, ஏப்ரல் 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (ஏப்ரல் 8) அதிகாலை பக்தர்கள் குண்டத்தில் இறங்க உள்ளனர். மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்காக 2 கூடுதல் எஸ்.பிக்கள் தலைமையில், 3 டி.எஸ்.பிக்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 32 சப்-இன்ஸ்பெக்டர்கள், 158 போலீசார், 80 ஆயுதப்படை வீரர்கள், 200 ஊர்காவல் படையினர் மற்றும் 50 டிராபிக் வார்டன்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவில் வளாகத்தில் பந்தல், குடிநீர் வசதி, மொபைல் டாய்லெட்டுகள், ஷவர் அறைகள், எல்.இ.டி திரைகள் உள்ளிட்ட அனைத்துவித வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாகன பார்க்கிங் வசதிகள் தனி இடங்களிலும், பள்ளி வளாகங்களிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக அவசர உதவிக்கு 100 எண்ணை அழைக்கலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.