நாளை புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 7ஆம் தேதி (திங்கட்கிழமை) அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தியாகராஜர் கோவில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மோகனசு சந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும், தென்காசியில் அருள்மிகு காசி விசுவநாதர் கோயில் குடமுழுக்கு மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 7 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறையை அடுத்து, கருவூலம் சார்நிலை கருவூலங்கள் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும் என்றும், பள்ளி-கல்லூரிகள் விடுமுறை என்றாலும், பொதுத் தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.