Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரதட்சனை கேட்டு திருமணம் செய்த சப் - கலெக்டர் !

Advertiesment
வரதட்சனை கேட்டு திருமணம் செய்த சப் - கலெக்டர் !
, சனி, 29 பிப்ரவரி 2020 (15:43 IST)
வரதட்சனை கேட்டு திருமணம் செய்த சப் கலெக்டர் !
பேராவூரணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்  உதவி ஆட்சியர்  சிவகுரு பிரபாகரன். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிகிறார்.
 
இந்நிலையில், இவருக்கு பெற்றோர் வரன் தேடி வந்தனர். எனவே, சென்னை நந்தனம் கல்லூரியில் கணிதப் பேராசிரியரியர் ஒருவரின் மகளான டாக்டர் கிருஷ்ணபாரதிக்கும் சில  நாட்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர்.
 
சிவகுரு பிரபாகரன், தான் திருமணம் செய்து கொள்ளப் போகின்ற ஒரு பெண்ணிடம் வரதட்சனை கேட்டுள்ளார்.  அதுவென்றால், தனக்கு மனைவியாக வருபவர், தான் பிறந்த ஊருக்கும், அங்குள்ள பகுதிகளுக்கும்  சேவையாற்ற வேண்டும் என நினைத்தார். பல பெண்கள்,அவரது கண்டிஷனைக் கேட்டு, ஒப்புக்கொள்ளாத நிலையில், அதை ஏற்றுக் கொண்டு டாக்டர் கிருஷ்ண பாரதி சம்மதித்து, சிவகுரு பிரபாகரனை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
உதவி கலெக்டர் மற்றும்  டாக்டர் கிருஷ்ண் பாரதியின் முயற்சியையும் சேவையையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாரத்தான் ஓகே; போராட்டம் கூடாது! – சென்னையில் 15 நாட்கள் போராட தடை!