இந்திய பெண்ணை திருமணம் செய்யும் மாக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மாக்ஸ்வெல் அவர்கள் இந்திய பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மாக்ஸ்வெல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி இராமன் என்பவரை விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும், இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருப்பதாகவும் மாக்ஸ்வெல் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இருவரும் கடந்த சில வருடங்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் தற்போது இருதரப்பின் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவிப்புச் செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்த கிளன் மாக்ஸ்வெல் தற்போது காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். இருப்பினும் விரைவில் அவர் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதுமட்டுமின்றி அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக மாக்ஸ்வெல் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மாக்ஸ்வெல் அவர்களை திருமணம் செய்யவிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி இராமன், ஆஸ்திரேலியாவில் மருந்துத் துறையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது