நடிகை அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

சனி, 29 பிப்ரவரி 2020 (11:04 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் இவர் நடிப்பில் வெளியான, அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது, முன்னனி இயக்குநர்களின் படங்களில் அவர் நடித்து வருகிறார்.பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார். 
 
இதையடுத்து பிரபாஸுடன் காதலில் இருப்பதாக தொடர்ந்து கிசு கிசுக்கப்பட்டு வந்த அனுஷ்கா இது வெறும் வதந்தி என கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து பிரபல கிரிக்கெட் வீரருடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார். இதனால் மிகுந்த கோபத்திற்கு ஆளான அனுஷ்கா.. இன்னும் எத்தனை பெரும் திருமணம் செய்து வைப்பீர்கள் என கேட்டு கோபத்துடன் காதல் எதுவும் இல்லை எல்லாம் வதந்தி என கூறினார். 
 
இந்நிலையில் தற்போது மீண்டும்  அனுஷ்கா ஒரு முன்னணி இயக்குனரின் மகனை திருமணம் செய்கிறார் என டோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. அந்த நபர் யார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை. இருந்தும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அனுஷ்கா சொன்னதை போல் இன்னும் எத்தனை பேருடன் தான் அவருக்கு திருமணம் செய்து வைப்பார்களோ....! இதற்கெல்லாம் அனுஷ்கா தான் ஒரு முடிவுகட்டவேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 007 கொல்றதுக்காகவே பிறந்தவன்: ஜேம்ஸ் பாண்ட் தமிழ் ட்ரெய்லர்!