Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் வன்முறைக்கு இடையே ...இந்துப் பெண்ணை மணந்த இஸ்லாமிய இளைஞர்!!

Advertiesment
டெல்லியில் வன்முறைக்கு இடையே ...இந்துப் பெண்ணை மணந்த இஸ்லாமிய இளைஞர்!!
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (15:45 IST)
டெல்லியில் வன்முறைக்கு இடையே ...இந்துப் பெண்ணை மணந்த இஸ்லாமிய இளைஞர்!!

கடந்த வருடம் இறுதியில் சிஏஏ என்ற இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக அப்போது முதலே எதிர்க்கட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் போராடி வருகின்றனர்.  சமீபத்தில்   வடகிழக்கு டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக வெடித்தது.
 
தற்போதுவரை 39 பது பேர்  இந்த வன்முறையால் இறந்துள்ளனர்.வன்முறையைத் தூண்டும்படி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,நேற்று டெல்லி போலீஸார் தற்போது வன்முறையைத் தூண்டியவர்கள் மீது நவடிக்கை எடுக்க முடியாது என பதில் அளித்திருந்தனர்.
 
இந்நிலையில், இன்று, டெல்லியில் வன்முறைக்கு நடுவே இஸ்லாமிய இளைஞர் ஒருவர், இந்துப்பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
 
கிழக்கு டெல்லியில் வசித்து வருபவர் 23 வயதான சாவித்ரிக்கும் , பக்கத்துக்கு வீட்டு இஸ்லாமிய இளைஞருக்கும் கடந்த 24 ஆம் தேதி திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், டிரம்பின் வருகையின் போது, வன்முறை ஏற்பட்டதால், திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. 
webdunia
டெல்லியில் வன்முறைக்கு இடையே ...இந்துப் பெண்ணை மணந்த இஸ்லாமிய இளைஞர்!!
இந்நிலையில், இன்று, சாவித்திரிக்கும், இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது என அப்பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். ஆனால், அவரது உறவினர்கள் யாரும் வன்முறை நடப்பதால் கலந்து கொள்ளவில்லை எனவும், பக்கத்து வீட்டு இஸ்லாமியர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாடி வைத்து இருக்கிறீர்களா? உங்களைக் கொரோனா தாக்க வாய்ப்பு அதிகம் – அதிரவைக்கும் ரிப்போர்ட் !