Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

Advertiesment
என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (13:37 IST)
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
ஆந்திர மாநிலம் காக்கிநாடா பான்குடியை சேர்ந்த அவளாசௌமியா தேவி (20) என்ற மாணவி, கல்லூரி விடுதியில் தங்கி பி.டெக். சிவில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அவருடன் திருவாரூரை சேர்ந்த தீட்சனா என்ற சக மாணவி ஒருவரும் தங்கி கல்வி பயின்று வருகிறார்.
 
இந்த நிலையில், நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் தீட்சனா வெளியில் சென்றுள்ளார். அவளாசௌமியா தேவி மட்டுமே விடுதி அறையில் இருந்துள்ளார். இந்த நிலையில், வெளியில் சென்றிருந்த தீட்சனா நேற்று இரவு விடுதிக்கு திரும்பி வந்து அறையை பார்த்தபோது அறைக்கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. கதவை தட்டியும், சத்தம் கொடுத்துப் பார்த்தும் திறக்காததால் கொஞ்சம் பலமாக ஓங்கி உதைத்துள்ளார், அப்போது கதவு திறந்துள்ளது.
 
உள்ளே அவளாசெளமியா தேவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து தீட்சனா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
முதல்கட்ட விசாரணையில் மாணவி ஒருவரை காதலித்து வருவதும், இதனை இரு குடும்பத்தினரும் அறிவார்கள் என்றும் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 நாட்களுக்கு உஷாரா இருங்க.... கனமழை தொடரும்!