Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 நாட்களுக்கு உஷாரா இருங்க.... கனமழை தொடரும்!

3 நாட்களுக்கு உஷாரா இருங்க.... கனமழை தொடரும்!
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (12:44 IST)
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 
 
ஆம், லட்சத்தீவு - தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நரிக்குறவ மாணவிக்கு இட்லி ஊட்டி மகிழ்ந்த முதல்வர்