Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் மாயமான மாணவி மதுரையில் தற்கொலை! – சிக்கிய கடிதம்!

Advertiesment
சென்னையில் மாயமான மாணவி மதுரையில் தற்கொலை! – சிக்கிய கடிதம்!
, புதன், 13 ஏப்ரல் 2022 (15:50 IST)
சென்னையிலிருந்து மாயமான 10ம் வகுப்பு பள்ளி மாணவி மதுரையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூரில் டிராவல்ஸ் நடத்தி வரும் செந்தில் என்பவரின் மகள் திவ்யதர்ஷினி. அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 9ம் தேதியன்று சிறுமி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் போலீஸில் புகார் அளித்த நிலையில் போலீஸார் சிறுமியை தேடி வந்தனர்.

மதுரையில் அலங்காநல்லூர் அருகே உள்ள குலமங்களம் பகுதியில் ஒருவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த கட்டிடத்தில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கியது குறித்து மதுரை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார் அவரது செல்போனை ஆராய்ந்த போது அவர் சென்னையில் காணாமல் போன திவ்யதர்ஷினி என தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதிய கடிதமும் கிடைத்துள்ளது. சிறுமி சென்னையிலிருந்து மதுரை வந்து 4 நாட்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? இது தற்கொலைதானா? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதமாற்றம் புகார் - ஆசிரியை பணியிடை நீக்கம்