புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக அமைச்சர் எஸ். ரகுபதி, தி.மு.க.வின் முக்கிய நோக்கம் பற்றிப் பேசினார். அவர் இந்த பேட்டியில் கூறியதாவது:
"தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும், அல்லது எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் குறி தேர்தல் குறிதான். யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியமோ, போட்டியாக பார்க்க வேண்டிய அவசியமோ எங்களுக்குக் கிடையாது."
"சொன்னதைச் செய்யும் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டு மக்களை வாழ வைக்கிறது என்பதை நிரூபித்துள்ளோம். தரமான பொருள்களைத் தரும் தரமான ஆட்சி முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிதான்."
நடிகர் விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்வதால், அதற்குத் தி.மு.க. எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்ட பிறகு, தவெக-காங்கிரஸ் கூட்டணி பற்றிய கேள்வி தேவையில்லை என்றும் ரகுபதி தெளிவுபடுத்தினார்.