தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் என்ற தொகுதியிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஸ்டாலின் அவர் கூறியுள்ளதாவது :
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற மேலும் தொடர்ந்து உழைப்போம்.
திமுகவை பொறுத்தவரை வெற்றியால் களிப்பிலாடுவதும் , தோல்வியால் துவண்டு விடுவதும் இல்லை.
கடந்தகால படிப்பினைகளுடன் எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம் . மகாராஷ்டிரா,ஹரியானாவில் புதிதாக அமைய இருக்கும் அரசுகளுக்கு எனது வாழ்த்துகள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் 2 இடைத்தேர்தல்களிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.
அதில், ’’ஸ்டாலின் தொட்டது துலங்க மாட்டேங்குதே. இன்று திமுக நிலைமை மல்லாக்க படுத்த காரப்பன் sorry கரப்பான் மாதிரி ஆயிடுச்சே’’ என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தின் தலைவர் சு.ப வீரபாண்டியன் .கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில், ’’யாரும் எதிர்பார்த்திராத வகையில், சிறுமுகை காரப்பன் அவர்களுக்கான ஆதரவு பெருகி, முகநூல், ட்விட்டர் அனைத்திலும் ட்ரெண்டிங் ஆகிறது. அடடே, மெர்சல் படம் தொடங்கி, காரப்பன் வரை ஹெச்.ராஜா "தொட்டதெல்லாம் துலங்குகிறது’’ ’என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை அடுத்து ’’ப. வீரபாண்டியனின் பதிவை டேக் செய்து இந்த பதிவை ஸ்டாலினோடு தொடர்பு படுத்தி கிண்டல் செய்துள்ளது ’’குறிப்பிடத்தக்கது.