அதிமுகவின் அதிகார பலம், பணம் பலம் வெற்றிக்கு காரணம் - கே.எஸ் அழகிரி
, வியாழன், 24 அக்டோபர் 2019 (14:15 IST)
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் என்ற தொகுதியிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்னும் 2 சுற்று வாக்குகள் எண்ணிக்கை மட்டுமே உள்ள நிலையில் நாங்குநேரியில் அதிமுக வெற்றியை உறுதிசெய்தது. அதேபோல் விக்கிரவாண்டியிலும் அதிமுக வெற்றியை உறுதிசெய்துள்ளது.
நங்குநேரியில், திமுக சார்பில் போட்டியிட்ட ரூபன் மனோகரன் 58, 901 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட நாராயணன் 89,600 வாக்குகள் பெற்று , காங்கிரஸை சேர்ந்த ரூபி மனோகரை 30,699 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
விக்கிரவாண்டித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி 68,646 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 1,13,428 வாக்குகள் பெற்று புகழேந்தியை 44, 782 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்நிலையில், இந்த இடைத்தேர்தல் வெற்றியால் தமிழக சட்டசபையில் அதிமுகவின் பலம் 124 ஆக அதிரிக்கிறது.அதேசமயம் திமுகவுக்கு 100 எம்.எல்.ஏக்களும், கங்கிரஸுக்கு 7 எம்.எல்.ஏக்களுமான மொத்தம் 107 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி பெற்றது ஆளும்கட்சி என்ற அதிகாரத்தாலும், பண பலத்தாலும்தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றசாட்டு முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக கட்சி பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஆளுங்கட்சி என்பதால் அவர்களுக்கு ஆதரவாக அதிகார பலமும், பண பலமும் கூடுதலாகவே இருக்கிறது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்