Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோல்வியை ஏற்கிறோம்...திமுக துவண்டுவிடாது...எதிர்காலத்தை வெல்லும் - மு.க. ஸ்டாலின் !

தோல்வியை ஏற்கிறோம்...திமுக துவண்டுவிடாது...எதிர்காலத்தை வெல்லும் - மு.க. ஸ்டாலின் !
, வியாழன், 24 அக்டோபர் 2019 (16:26 IST)
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் என்ற தொகுதியிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளும்  அதிமுக  வெற்றி பெற்றுள்ளது.
இரு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் நிலவரம் : நங்குநேரியில், திமுக சார்பில் போட்டியிட்ட ரூபன் மனோகரன் 58, 901 வாக்குகள் பெற்றார்.  அதிமுக சார்பில் போட்டியிட்ட நாராயணன் 89600 வாக்குகள் பெற்று , காங்கிரஸை சேர்ந்த ரூபி மனோகரை 30699 வாக்குகள் வித்தியாசத்தில்  தோற்கடித்தார்.
 
விக்கிரவாண்டித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி 68646 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 113428 வாக்குகள் பெற்று  புகழேந்தியை 44 782 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 
 
ஆனால் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜான்குமார் வெற்றி பெற்று அக்கட்சிக்கு ஆறுதல் அளித்துள்ளார்.
 
இந்நிலையில், இந்த இடைத்தேர்தல் வெற்றியால் தமிழக சட்டசபையில் அதிமுகவின் பலம் 124 ஆக அதிரிக்கிறது.அதேசமயம் திமுகவுக்கு 100 எம்.எல்.ஏக்களும், கங்கிரஸுக்கு 7 எம்.எல்.ஏக்களுமான மொத்தம் 107 உறுப்பினர்கள் உள்ளனர்.
 
இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஸ்டாலின்  கூறியுள்ளதாவது :
webdunia
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற மேலும் தொடர்ந்து உழைப்போம்.
 
திமுகவை பொறுத்தவரை வெற்றியால் களிப்பிலாடுவதும் ,தோல்வியால் துவண்டு விடுவதும் இல்லை. 
 
கடந்தகால படிப்பினைகளுடன் எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம் . மகாராஷ்டிரா,ஹரியானாவில் புதிதாக அமைய இருக்கும் அரசுகளுக்கு எனது வாழ்த்துகள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
மேலும் 2 இடைத்தேர்தல்களிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மண்டையில் விழுந்த இரும்பு குண்டு: அல்பாய்சில் போன உயிர்