Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கொடிகம்பம் வைத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை”.. ஸ்டாலின் குற்றச்சாட்டு

Arun Prasath
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (13:24 IST)
கோவையில் அதிமுக கொடி கம்பம் விழுந்து பெண் கால் இழந்த நிலையில், அந்த கொடிக்கம்பத்தை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் சமீபத்தில் முதல்வரின் வருகையை ஒட்டி பீளமேடு அவிநாசி சாலையின் நடுவே கொடிகம்பம் வைக்கப்பட்டது. அந்த கொடிகம்பம் அனுராதா என்ற பெண் சாலையில் சென்றுகொண்டிருந்த போது விழுந்தது. அனுராதா நிலை தடுமாறி விழுந்ததில் பின்னால் வந்த லாரி அவரின் கால்கள் மீது ஏறியதில் இரண்டு கால்களும் நசுங்கின.

இதனை தொடர்ந்து கோவையில் சிகிச்சை பெற்று வந்த அனுராதாவின் இடது காலை மருத்துவர்கள் நீக்கினர். வலது காலையும் நீக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கால் இழந்த அனுராதாவிற்கு ஆறுதல் கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் “கோவையில் அதிமுக கொடிகம்பம் விழுந்து பெண் கால் இழந்த நிலையில் லாரி ஓட்டுநர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த கொடிக்கம்பம் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாபர் சாதிக் சகோதரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.. நீதிபதி முக்கிய உத்தரவு..!

யானை தாக்கி இருவர் பலி எதிரொலி: பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை..!

கூட்டணிக்கு வர்றவங்க எல்லாம் 50 கோடி, 100 கோடி கேட்குறாங்க: திண்டுக்கல் சீனிவாசன்

இன்றிரவு கனமழை பெய்யும் பகுதிகள்: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

‘அமரன்’ திரையிட்ட தியேட்டரில் குண்டு வீசிய 3 நபர்கள் கைது: தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments