திமுக குடும்ப கட்சி அல்ல, குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த கட்சி என முக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் முக ஸ்டாலின் திமுக தலைவர் பதவிக்கு வந்தார். முன்னதாக அவர் வகித்த இளைஞரணி தலைவர் பதவியை தற்போது ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் வகித்துள்ளார்.
மேலும் எம்.பி.கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மு.க.அழகிரி, உள்ளிட்டோரும் கலைஞரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். திமுகவை விமர்சிப்பவர்கள் முதலில் பயன்படுத்தும் வார்த்தை “அது குடும்ப கட்சி” என்று தான் இருக்கும்.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு விளக்கமளித்த திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக குடும்ப அரசியல் செய்வதாக கூறுகிறார்கள், ஆனால் திமுக குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த கட்சி என கூறியுள்ளார்.