Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை தண்ணீர் தரமற்றது.. ஆய்வில் அதிர்ச்சி

சென்னை தண்ணீர் தரமற்றது.. ஆய்வில் அதிர்ச்சி

Arun Prasath

, ஞாயிறு, 17 நவம்பர் 2019 (12:58 IST)
சென்னை பகுதியில் குழாய் மூலம் விநியோக்கிக்கப்படும் தண்ணீர் தரமானது இல்லை என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் தரமானதாக இல்லை என மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் 20 மாநில தலைநகரங்களில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரின் மாதிரிகளை இந்திய தர அமைப்பு ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் சென்னை பகுதியில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரில் குளோரட், புளூரைட், போரான் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இருக்கின்றன எனவும், இதனால் நீரி தரம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை சொல்கிறது என மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

மேலும் சென்னை போலவே சண்டிஹர், குவாஹட்டி, பெங்களூர், காந்திநகர், ஜெயப்பூர், லக்னோ, உள்ளிட்ட நகரங்களிலும் குடிநீர் தரம் குறைந்து காணப்படுவதாக அந்த அறிக்கை கூறுவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டு காதலருக்காக கணவனைக் கொலை செய்த மனைவி – நாடகம் அம்பலம் !