Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வழிபட வந்த பெண்ணை தாக்கிய கோவில் தீட்சிதர்..

Advertiesment
சிதம்பரம்

Arun Prasath

, ஞாயிறு, 17 நவம்பர் 2019 (10:22 IST)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழிபட வந்த பெண்ணை தாக்கியுள்ளர் அக்கோயிலின் தீட்சிதர்.

சிதம்பரம் பகுதியை சேர்ந்த லதா என்பவர், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியராக உள்ளார். இந்நிலையில் இவர் தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்ய நடராஜர் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த ஆலயத்தில் உள்ள பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனை தட்டை வழங்கியுள்ளார். ஆனால் தீட்சிதரோ அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே மந்திரம் கூட சொல்லாமல் தீபாராதனை காட்டியதாக கூறப்படுகிறது.

“ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என தீட்சிதரிடம் அப்பெண் கேள்வி கேட்க, ஏற்பட்ட வாக்குவாதத்தில் தீட்சிதர் அப்பெண்ணை தாக்கியுள்ளார். அதில் அப்பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதனை தொடர்ந்து லதா போலீஸில் புகார் அளித்துள்ளார். தற்போது காவல் துறை விசாரணை நடத்திவருவதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை அதிபர் தேர்தல்.. ராஜபக்‌ஷே முன்னிலை